poor product sale

அனுப்புதல்,
க.அருள் மூர்த்தி
2/95 மேற்க்கு தெரு
சூரம்பட்டி அஞ்சல்
முசிறி வட்டம்
திருச்சி – 621208
mobile – 919789605634

பொருள் : தரமற்ற பொருளை விற்பனை செய்ததோடு அது குறித்து
கேட்டபோது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மீனாட்சி டிரேடர்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை வேண்டி

அய்யா,
மேற்கண்ட முகவரியில் வசித்துவரும் நான் 16-03-2009 (திங்கள் கிழமை) அன்று முசிரி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மீனாட்சி டிரேடர்ஸ் – ல் ஒரு ஜம்பர் வாங்க சென்றேன் அங்கு 2 விற்பனையாளர்கள் இருந்தார்கள் நான் அவர்களிடம் எனக்கு ஒரு ஜம்பர் வேண்டும் என கேட்டேன் அவர்கள் ஒரு ஜம்பரை கொடுத்து ரூ 30 என கூறினார்கள் சரி என கூறி ரூ 30 கொடுத்து ஜம்பர் வாங்கினேன். அதனை பயன்படுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எனது அலுவலகத்தில் சுவற்றில் ஒரு துளை போட்டேன் அப்போது அந்த ஜம்பர் வளைந்து விட்டது உடனே மீனாட்சி டிரேடர்ஸ்க்கு சென்று வாங்கி 5 நிமிடத்தில் சுவற்றில் ஒரு துளைபோடும்போதே வளைந்துவிட்டது எனவே எனக்கு வேறு ஜம்பர் கொடுங்கள் அல்லது ரூபாயை திருப்பிகொடுங்கள் என கேட்டேன் அப்போது முதலாளி இல்லை எனவும் அவர் வந்த பின் அவரிடம் கேளுங்கள் எனவும் கடையில் இருந்த விற்பனையாளர் கூறினார். அதனை அடுத்து சுமார் 45 நிமிடத்திற்க்கு பின் மீண்டும் மீனாட்சி டிரேடர்ஸ்க்கு சென்றேன் அப்போது அங்கு இருந்த விற்பனையாளர் முதலாளி வந்துவிட்டார் எனவும் அவரிடம் கேளுங்கள் என கூறியதை அடுத்து நான் மீனாட்சி டிரேடர்ஸ் உரிமையாளரிடம் நடந்ததை கூறி ஜம்பரை மாற்றி தாருங்கள் என கேட்டேன்.உடனே மீனாட்சி டிரேடர்ஸ் உரிமையாளர் ஜம்பரை மாற்றி தரமுடியாது பணத்தை திருப்பிதரவும் முடியாது என கூறினார். என்னிடம் உங்கள் கடையில் ஜம்பர் வாங்கியதற்கான ரசீது உள்ளது என ரசீதை காண்பித்து வாங்கிசென்று 5 நிமிடத்தில் திருப்பி கொண்டுவந்து உள்ளேன் ஒரு துளைபோடும்போதே ஜம்பர் வளைந்துவிட்ட்து எனவே ஜம்பரை மாற்றிதாருங்கள் அல்லது எனது ரூபாயை தாருங்கள் என்றேன். உடனே மீனாட்சி டிரேடர்ஸ் உரிமையாளர் இது என்கடை பொருளே இல்லை என்பேன் என்றும் இந்த ஜம்பர் இங்கு வாங்கவில்லை இது என்கடை ரசீது இல்லை என கூறுகிறேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்றும் 30ரூபாய் பொருளுக்கு மாற்றிதா என கூறிக்கொண்டு நிற்கிறாய் என தகாதா வார்த்தைகளை கூறி ஜம்பரை மாற்றி தரமுடியாது பணத்தையும் திருப்பிதர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துகொள் என்றார் அதனை அடுத்து மேலும் விவாதம் செய்யாமல் நான் அங்கு இருந்து வந்துவிட்டேன் எனவே மேற்கூறியவாறு தரமற்ற பொருளை கொடுத்து என்னை ஏமாற்றியதோடு அது குறித்து கேட்டபோது அநாகரிகமாக நடந்து கொண்ட மீனாட்சி டிரேடர்ஸ் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் என்னிடம் விற்க்கபட்ட தரமற்ற ஜம்பரை பெற்றுகொண்டு அதற்க்கு என்னிடம் இருந்து பெற்ற ரூ 30-யை திரும்ப பெற்று தர வேண்டியும் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி !
இப்படிக்கு

க.அருள் மூர்த்தி

இடம் :முசிரி
தேதி :17-03-2009
இணைப்பு :மீனாட்சி டிரேடர்ஸ்-ல் 16-03-2009 அன்று ஜம்பர் வாங்கியதற்க்கு எனக்கு வழங்கபட்ட ரசீது நகல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.